“வெளிநாடுகளுக்கு ஊழியர்களை அனுப்பாதீர்கள்” - கர்நாடக ஐடி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

“வெளிநாடுகளுக்கு ஊழியர்களை அனுப்பாதீர்கள்” - கர்நாடக ஐடி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு
“வெளிநாடுகளுக்கு ஊழியர்களை அனுப்பாதீர்கள்” - கர்நாடக ஐடி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் இருப்பதால், ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது உலகின் பல நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனா பாதித்த நாடுகளில் இருக்கும் ஒருவர் மற்றொரு நாட்டிற்கு சென்றால் அந்த நாட்டிற்கு கொரோனா பரவுவதாக கூறப்படுகிறது. இதனால், கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை சோதனைகளுக்கு பின்பே மத்திய அரசு அனுமதிக்கிறது. ஏதேனும் அறிகுறி காணப்பட்டால் அவர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்படுகின்றனர். இருப்பினும், இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வந்தவர்களால் இந்தியாவிற்குள்ளும் தற்போது கொரோனாவின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மற்றும் தெலங்கனா மாநிலங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள சிடிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அந்த நிறுவனத்தில் அலுவலகம் மூடப்பட்டது. ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதேபோல், கர்நாடகாவில் உள்ள ஐடி நிறுவனங்களும், வீட்டில் இருந்து பணியாற்றும்படி தங்களது ஊழியர்களைக் கேட்டுக் கொண்டது.

இத்தகைய சூழலில், கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக, ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நிமிர்த்தமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. “ஐடி நிறுவனங்களில் ஹப் என்பதால் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பெங்களூருவுக்கு வருகிறார்கள். அதனால், கொரோனா அச்சம் முடிவுக்கு வரும் வரை ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என ஐடி நிறுவனங்களில் தெரிவித்துள்ளோம்” என கர்நாடக மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சுதாகர் கூறியுள்ளார்.

அதேபோல், கடந்த பிப்ரவரி 21ஆம் தேதிக்கு பிறகு பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களில் இருந்து கொரோனா பாதித்த நாடுகளுக்கு சென்றவர்களை பட்டியலையும் கர்நாடக அரசு கேட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com