கர்நாடகா: ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு - எடியூரப்பா

கர்நாடகா: ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு - எடியூரப்பா

கர்நாடகா: ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு - எடியூரப்பா
Published on

கர்நாடக மாநிலத்தில் ஜூன் 14ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக மாநிலமும் தற்போது ஊரடங்கை ஜூன் 14ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றாக உள்ள கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, தற்போது பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கர்நாடகாவில் தற்போது ஜூன் 7 வரை உள்ள ஊரடங்கை ஜூன் 14 வரை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தாக்கத்தின் வேகம் குறையும் நிலையில் ஊரடங்கை ஜூன் 21 வரை நீட்டிக்கவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா முழு ஊரடங்கில் காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com