- மஜத எம் எல் ஏக்களை ரூ.100 கோடி மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பாஜகவினர் பேரம் பேசியதாக குமாரசாமி குற்றச்சாட்டு.
- ஆளுநர் வஜுபாய் வாலாவை எடியூரப்பா மீண்டும் நேரில் சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு வலியுறுத்தல்.
- காங்கிரஸ் கட்சிக்கூட்டத்தில் 11 எம்எல்ஏக்கள் மற்றும் மஜத கட்சிக்கூட்டத்தில் 2 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை.
- காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்த ஆளுநர் மாளிகை அனுமதி மறுப்பு.
- வீரப்ப மொய்லி, குமாரசாமி உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டும் ஆளுநரை சந்தித்து, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு வலியுறுத்தினர்.
- காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் மைசூர் சாலையில் உள்ள ஈகிள் சொகுசு விடுதியில் தங்கவைப்பு.
- எடியூரப்பா நாளை 9.30 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் என ட்விட் செய்து, பின்னர் உடனடியாக நீக்கினார் பாஜக எம்எல்ஏ சுரேஷ்.
- எடியூரப்பாவை முதலமைச்சராக பதவியேற்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு.
- ஆட்சிப் பொறுப்பேற்ற பின் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கிய ஆளுநர்.
- பாஜக ஆட்சியமைக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் மனு.