சித்தராமையாவை முந்தும் ஜிடி தேவகவுடா : ஒருகாலத்தில் இருவரும் நண்பர்கள்!

சித்தராமையாவை முந்தும் ஜிடி தேவகவுடா : ஒருகாலத்தில் இருவரும் நண்பர்கள்!

சித்தராமையாவை முந்தும் ஜிடி தேவகவுடா : ஒருகாலத்தில் இருவரும் நண்பர்கள்!
Published on

கர்நாடக சட்டப்பேரவையின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒரு நேரம் காங்கிரஸ் முன்னிலையில் சென்றால், அடுத்த நொடி பாஜக முந்துகிறது. இவ்வாறு இரண்டும் மாறி, மாறி முன்னிலை வகித்து வந்தன. தற்போது பாஜக முன்னிலையில் உள்ளது. இதற்கிடையே மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற கட்சி 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில்முன்னிலை வகிக்கிறது. இந்தக் கணக்குப்படி பார்த்தால், காங்கிரஸ் அல்லது பாஜக யார் அதிக இடங்களை பிடித்தாலும், மாஜதவின் ஆதரவு என்பது முக்கியவத்துவம் வகிக்கும்.

இந்த நிலையில் கர்நாடக தேர்தலில் பெரும் செல்வாக்குடன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் சித்தராமையாவை சாமுண்டேஸ்வரி தொகுதியில் பின்னுக்கு தள்ளியுள்ளார் ஜிடி தேவகவுடா. தற்போது இருவரும் தேர்தல் களத்தில் நேருக்குநேர் நின்று போட்டி போட்டாலும், ஒரு காலத்தில் இருவருமே நண்பர்களாக இருந்தவர்கள். சாதாரன விவசாயக் குடும்பத்தில் பிறந்த தேவகவுடாவுக்கு, அரசியல் ஈடுபாடுகள் மூலம் சித்தராமையாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நட்பாக மாற, இருவரும் அரசியலில் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். ஜிடி தேவகவுடா அப்போது காங்கிரஸில் இருந்தார்.

பின்னர் இருவரும் சில காரணங்களால் பிரிய, தேவகவுடா ஜனதா தளத்தில் இணைந்தார். இதையடுத்து தேவகவுடாவை அரசியலில் வீழ்த்த சித்தராமையாவும், அவரை அரசியலில் வீழ்த்த தேவகவுடாவும் பல அரசியல் திட்டங்களை தீட்டி வந்தனர். அதன் விளைவாக 2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சித்தராமையா போட்ட அரசியல் திட்டத்தில், தேவகவுடா தோல்வியை தழுவினார். இதன் எதிரொலியாக 2007ஆம் ஆண்டு கவுடா பாஜகவில் இணைந்தார். பின்னர் அங்கும் சில நிகழ்வுகள் ஏற்பட, இறுதியாக 2013ஆம் ஆண்டில் மஜதவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது நடைபெறும் கர்நாடக தேர்தலில் சித்தராமையாவும், ஜி.டி. தேவகவுடாவும் சாமுண்டேஸ்வரி தொகுதியில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளனர்.நீண்ட இருப்பினும் வருட நட்பு, நீண்ட வருட பகை என இருவருக்கும் இடையே பல பந்தங்கள் இருக்கின்றன. இதனால் அங்கு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சித்தராமையாவை விட தேவகவுடா 16 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் முன்னிலையில் உள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com