கர்நாடகாவில் மீண்டும் அதே நாடகம்தான் நடக்கப் போகுது! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்!

கர்நாடகாவில் இன்று அனைத்து தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நிறைவுற்ற பின்னர், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.
பாஜக, காங்., ஜனதா தளம்
பாஜக, காங்., ஜனதா தளம்twitter page

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

தேர்தலால், கடந்த ஒரு மாத காலமாகச் சூடுபிடிதிருந்த கர்நாடகாவில், இன்று (மே 10) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. வரும் 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

இந்த நிலையில், இன்றைய வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில்,

பாஜக 85 - 100

காங்கிரஸ் 94 - 108

ஜனதா தளம் 24 - 32

பிற கட்சிகள் 2 - 6

டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில்,

பாஜக 114

காங்கிரஸ் 86

ஜனதா தளம் 21

பிற கட்சிகள் 3

ஜி மேட்ரிக்ஸ் வெளியிட்டிருக்கும் கருத்துக்கணிப்பில்,

பாஜக 79 - 94

காங்கிரஸ் 103 - 118

ஜனதா தளம் 25 - 33

பிற கட்சிகள் 0 - 2

டிவி9 வெளியிட்டிருக்கும் கருத்துக்கணிப்பில்,

காங்கிரஸ் 99 - 109

பாஜக 88 - 98

ஜனதா தளம் 21 - 26

பிற கட்சிகள் 0 - 4

நியூஸ் நேசன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில்,

பாஜக 114

காங்கிரஸ் 86

ஜனதா தளம் 21

பிற கட்சிகள் 3

ஜி நியூஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில்,

பாஜக 79 - 94

காங்கிரஸ் 103 - 118

ஜனதா தளம் 25 - 33

பிற கட்சிகள் 2 - 5

ஏஷியா நெட் டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில்,

பாஜக 94 - 117

காங்கிரஸ் 91 - 106

ஜனதா தளம் 14 - 24

பிற கட்சிகள் 0 - 2

சிவோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில்,

பாஜக 83 - 95

காங்கிரஸ் 100 - 112

ஜனதா தளம் 21 - 29

பிற கட்சிகள் 02 - 06

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களைப் பிடிக்கும் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளும் தங்களுக்குத்தான் பெரும்பான்மை கிடைக்கும் என மாறி மாறி கூறிவந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவுக்கே சற்று கூடுதலாக இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடக்கும் தனிப்பெரும்பான்மை உடன் திகழும் என்று கூறுகின்றன. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில் பாஜகவும் 80-100 இடங்கள் என்றே பல கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இதனால், இரு அணிகளுக்கும் இடையே பலத்த போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடத்தில் தான் 20-25 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ள மஜதவின் பங்கு பெரிதாக இருக்கும். ஒருவேளை பாஜக, காங்கிரஸ் இரண்டிற்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் மஜதவை அணுகி கூட்டணி அமைக்க முயற்சிப்பார்கள். அப்படியென்றால் இந்த முறையும் மஜத தான் கிங் மேக்கராக இருக்க வாய்ப்புள்ளது.

கருத்துக் கணிப்பு குறித்து கூடுதல் தகவல் மற்றும் புரிதலுக்கு இந்த வீடியோவை காணவும்...

மீண்டும் அந்த நாடகங்கள் அரங்கேறலாம்!

கர்நாடக சட்டமன்ற தேர்தல்களை பொறுத்தவரை வாக்குப் பதிவுக்கு முன்பு இருப்பதை விட தேர்தல் முடிவுகள் வந்தபிறகு தான் மிகவும் பரபரப்பாக இருக்கும். யாரும் மெஜாரிட்டி கிடைக்காத சூழலே அதிகம் உருவாகும் என்பதால் மஜதவுடன் யார் கூட்டணி அமைப்பது என்பது பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி இருக்கும். கூட்டணி அமைப்பதற்கான அந்த கால இடைவெளியில் தங்களது எம்.எல்.ஏக்களை தக்க வைக்க சொகுசு விடுதிகளில் தங்கவைக்கும் சூழலும் உருவாகும்.

ஒருவேளை காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றாலும் 120-130 இடங்கள் கிடைக்கும். அதிகபட்சம் 5-10 இடங்கள் மெஜரிட்டியை தாண்டி கூடுதலாக கிடைத்தாலும் பாஜகவிடம் இருந்து தங்களது உறுப்பினர் தாவிவிடாமல் இருப்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் போராட வேண்டியிருக்கும். இதெல்லாம் இதற்கு முன்பு நடந்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com