109 தொகுதிகளில் பாஜக முன்னிலை! காங்கிரஸ் அதிர்ச்சி!

109 தொகுதிகளில் பாஜக முன்னிலை! காங்கிரஸ் அதிர்ச்சி!

109 தொகுதிகளில் பாஜக முன்னிலை! காங்கிரஸ் அதிர்ச்சி!
Published on

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 109 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாயின. 

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிக்கு இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. முன்னணி நிலவரம் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருந்தது. 10 மணி நிலவரப்படி பாஜக 109 இடங்களிலும் காங்கிரஸ் 68 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 43 இடங்களிலும் முன்னிலைப் பெற்றிருந்தது. தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி, பிறகு சர்ரென பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com