\
கர்நாடக காங். எம்.எல்.ஏ டி.கே.சிவகுமார் திடீர் கைது 

கர்நாடக காங். எம்.எல்.ஏ டி.கே.சிவகுமார் திடீர் கைது 

கர்நாடக காங். எம்.எல்.ஏ டி.கே.சிவகுமார் திடீர் கைது 
Published on

மும்பையில் தங்கியிருந்த ராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏக்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ டி.கே.சிவகுமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கர்நாடக அரசியலில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் 13 எம்.எல்.ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தனர். இதனையடுத்து அவர்கள் மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். 

இந்நிலையில் அவர்களை சந்திக்க கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் எம்.எல்.ஏவுமான டி.கே.சிவக்குமார் அவர்களை சந்திக்க சென்றார். காலை முதல் அவர் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று காத்திருந்தார். எனினும் எம்.எல்.ஏக்கள் யாரும் அவரை சந்திக்க விருப்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து டி.கே.சிவகுமார் மற்றும் மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா ஆகியோர் ஓட்டலுக்கு வெளியே காத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மும்பை காவல்துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனையடுத்து மும்பை காவல்துறையினர் டி.கே சிவக்குமார் உள்ளிட்டவர்களை கைது செய்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com