ரசிகர் கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கன்னட நடிகர் தர்ஷனுக்கு வரும் 18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Actor Darshan and his wife
Actor Darshan and his wifefile

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா கௌடா உள்பட 17 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகா சுவாமியை, நடிகர் தர்ஷன் அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான பவித்ரா கௌடா உள்ளிட்டோர் கடத்திக் கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷனை கடந்த ஜூன் 11-ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

Court remand
Court remandfile images

ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கைதாகியுள்ள தர்ஷனும் அவரது தோழி பவித்ரா கௌடா உள்ளிட்டோர் காவல்துறையின் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் கூட்டாளிகள் 17 பேரை பெங்களுாரு குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர் இதையடுத்து தர்ஷன் உள்ளிட்ட 17 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதியரசர் உத்தரவிட்டார்.

Actor Darshan and his wife
கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தலைவலி.. பின்னணியில் நடந்தது என்ன?

இந்நிலையில், இன்றுடன் நீதிமன்றம் காவல் முடிந்த நிலையில், இன்று தர்ஷன் உள்ளிட்ட 17 பேரையும் வீடியோ காண்பரன்ஸ் மூலம் பெங்களுர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தினர் அப்போது நீதிபதி, 17 பேரையும் வரும் ஜூலை 18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com