யானைத் தாக்கி உயிரிழந்தவர் உடலை கொரோனா அச்சத்தால் உறவினர்கள் வாங்க மறுப்பு

யானைத் தாக்கி உயிரிழந்தவர் உடலை கொரோனா அச்சத்தால் உறவினர்கள் வாங்க மறுப்பு

யானைத் தாக்கி உயிரிழந்தவர் உடலை கொரோனா அச்சத்தால் உறவினர்கள் வாங்க மறுப்பு
Published on

கர்நாடகாவில் யானை தாக்கி உயிரிழந்தவரின் உடலை கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்தினர் வாங்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூருக்கு அருகில் உள்ள சாமராஜா நகர்ப் பகுதியைச் சேர்ந்த 44 வயது மிக்க ஒருவர் யானைத் தாக்கி உயிரிழந்துள்ளார். இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயன்றுள்ளனர்.

ஆனால் கொரோனா பரவல் அச்சம் காரணமாக அவர்கள் யாரும் இறந்தவரின் உடலை வாங்க முன்வரவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் இறந்தவரின் உடலை வாங்கிய மேடகவுடா துணை காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்களின் உதவியுடன் அந்த உடலிற்கு இந்து முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com