கர்நாடக மேலவையில் பரபரப்பு.. ஆபாச வீடியோ பார்த்த காங்கிரஸ் உறுப்பினர்!

கர்நாடக மேலவையில் பரபரப்பு.. ஆபாச வீடியோ பார்த்த காங்கிரஸ் உறுப்பினர்!
கர்நாடக மேலவையில் பரபரப்பு.. ஆபாச வீடியோ பார்த்த காங்கிரஸ் உறுப்பினர்!

கர்நாடக சட்ட மேலவை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது அவையில் காங்கிரஸ் எம்.எல்.சி ஒருவர் செல்போனில் ஆபாசப் படம் பார்த்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்ட மேலவை கூட்டம் நேற்று காலை தொடங்கிது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ராதோட், தனது செல்போனில் ஆர்வமாக வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஆபாச காட்சிகள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் செல்போனில் வீடியோ பார்க்கும் வீடியோ காட்சி கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இக்குற்றச்சாட்டு குறித்து பிரகாஷ் ராதோட் கூறுகையில், "எனது செல்போனில் நிறைய வீடியோக்கள் இருந்தன. அதை நீக்கிக் கொண்டிருந்தேன். எனது கேள்விக்கு செல்போனில் டிஜிட்டலில் பதில் அனுப்பி இருந்தனர். அந்த பதிலை தேடிக் கொண்டிருந்தேன். நான் எந்த ஆபாச வீடியோவையும் பார்க்கவில்லை’’ என்றார்.

இதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் சி.சி.பாட்டீல், லட்சுமண் சவதி ஆகியோர் ஆபாக வீடியோ பார்த்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவர்களில் தற்போது லட்சுமண் சவதி துணை முதல்வராகவும், சி.சி.பட்டீல் அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com