தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டியை அகில இந்திய காங்கிரஸ் தலைமை கலைத்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை அடைந்தது. காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியதால் அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. கர்நாடகாவை எடுத்துக் கொண்டால் காங்கிரஸ் கூட்டணி வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்நிலையில் தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டியை அகில இந்திய காங்கிரஸ் தலைமை கலைத்துள்ளது. அதேசமயம் மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மற்றும் செயல் தலைவர் தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.