டெல்லியில் போராட்டத்தை தொடங்கினார் சித்தராமையா - வரிப்பகிர்வு தொடர்பாக என்னதான் பிரச்னை? -முழுவிபரம்

மத்திய அரசு கர்நாடக வரி பகிர்வில் அநீதி இழைக்கிறது எனக் கூறி டெல்லியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா துணை முதல்வர் டி கே சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிகள் சார்பில் போராட்டம் தொடங்கியுள்ளது.
கர்நாடகா
கர்நாடகா PT

மத்திய அரசு கர்நாடக வரி பகிர்வில் அநீதி இழைக்கிறது எனக் கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி கே சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இன்று போராட்டம் தொடங்கியுள்ளது.

வரி பகிர்வில் கர்நாடகா உண்மையில் இழப்பை சந்திக்கிறதா என்பது குறித்த விவரங்களை தற்போது காணலாம்.

கர்நாடக அரசின் மிக முக்கியமான குற்றச்சாட்டு சுமார் 4.300 லட்சம் கோடி ரூபாயை வழி வருவாயாக கர்நாடகா அரசு கொடுக்கும் நிலையில் வரியாக கிடைக்கும். ஒவ்வொரு நூறு ரூபாயிலும் 12 முதல் 13 ரூபாய் வரை மட்டும்தான் கர்நாடகா அரசுக்கு திரும்ப கிடைக்கிறது என்பதுதான்.

கர்நாடக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 14,87,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்து இருப்பதாகவும் பதினைந்தாவது நிதிக்குழு காலத்தில் மட்டும் சுமார் 1.87 லட்சம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதற்கு உரிய நேரத்தில் மத்திய அரசு பல திட்டங்களுக்கு உரிய நிதியை வழங்காமல் இருந்தது கர்நாடகாவிற்கு வர வேண்டிய நியாயமான வரி பகிர்வு விதியினை வழங்காதது தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.

NGMPC22 - 147

14ஆவது நிதி குழுவில் கர்நாடகாவிற்கான மத்திய அரசின் வரி பங்கு 4.71 சதவீதமாக இருந்த நிலையில், அது 15 வது நிதி குழுவில் 3.64 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 62,098 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல 15 வது நிதி குழு சிறப்பு நிதியாக 11,495 கோடி கர்நாடகாவிற்கு வழங்க பரிந்துரை செய்த நிலையில் அவை விடுவிக்கப்படாமல் உள்ளது. இவ்வாறு சிறப்பு நிதிகள் சுமார் 73 ஆயிரத்து 593 கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாக கர்நாடகா அரசு தெரிவிக்கின்றது.

கர்நாடகா அரசு முன்வைக்கும் மற்றொரு மிக முக்கியமான குற்றச்சாட்டு, ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக கர்நாடக மாநில அரசின் வரி வசூல் 15 சதவீதம் வரை உயர்வு கண்டு வந்த நிலையில் தற்பொழுது வரி வசூல் சதவிகிதம் முழுமையாக குறைந்து போய் இருக்கிறது என்றும் இதனால் ஆண்டிற்கு 25000 முதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாகவும் செஸ் மற்றும் சர்சார்ஜுகள் இல்லாததன் காரணமாக 45,322 கோடி இழப்பை கர்நாடகா சந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 -18 மத்திய நிதிநிலை அறிக்கையின் மொத்த அளவு சுமார் 21.46 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் நிலையில் அதில் வருவாய் பகிர்வு மற்றும் உதவி வழங்குதல் ஆகியவற்றின் கீழ் 47 ஆயிரத்து 980 கோடி ரூபாய் கிடைக்கப்பெற்றதாகவும், 2018 -19 நிதி ஆண்டில் மொத்த அளவு 24.42 லட்சமாக உயர்ந்த போதும் கர்நாடகாவிற்கான பகிர்வு 51 ஆயிரத்து 157 கோடி ரூபாயாக மட்டுமே கொடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-20 நிதியாண்டின் மொத்த அளவு சுமார் 27.86 லட்சம் கோடி ரூபாய் கர்நாடகாவிற்கு 54 ஆயிரத்து 814 கோடி, 2023-24 நிதியா ஆண்டில் மொத்த அளவு 45.03 லட்சம் கோடி ரூபாய், கர்நாடகாவிற்கான பகிர்வு 50,257.

இன்னமும் 16 வது நிதிக்குழுவை மத்திய அரசு அமைக்கும் பொழுது மேலும் 45,000 கோடி ரூபாய் அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவிற்கு இழப்பு ஏற்படும் என கர்நாடக அரசு சார்பில் புள்ளி விவரங்களாக தெரிவிக்கப்படுகின்றது.

பெட்ரோல் டீசல் பொருட்கள் மீதான மத்திய அரசின் செஸ் மற்றும் சர்சார்ஜுகள் காரணமாகவும் மத்திய அரசின் கன்ஸ்யூமர் வரி ஆகியவற்றில் சுமார் 95 சதவிகிதத்தை தன்னிடமே வைத்துக் கொள்வதுடன் அதனை வரி பகிர்வு கணக்காக வெளியே சொல்வதில்லை எனவும் குறை கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com