மேகதாது அணை விவகாரம்: பிப். முதல் வாரத்தில் அனைத்து கட்சி கூட்டம்- முதல்வர் பசவராஜ் பொம்மை

மேகதாது அணை விவகாரம்: பிப். முதல் வாரத்தில் அனைத்து கட்சி கூட்டம்- முதல்வர் பசவராஜ் பொம்மை

மேகதாது அணை விவகாரம்: பிப். முதல் வாரத்தில் அனைத்து கட்சி கூட்டம்- முதல்வர் பசவராஜ் பொம்மை
Published on

மேகதாது விவகாரத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் பெங்களூருவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

மேகதாது அணை உள்ளிட்ட முக்கிய நதி நீர் பிரச்னைகள் குறித்து இன்று முதல்வர் பசவராஜ் பொம்மை சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் முதல்வர் பேசிய போது, “மேகதாது விவகாரத்தில் இந்த மாதம் இறுதியில் சட்ட வல்லுனர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தப்படும். வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் பெங்களூருவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடகா சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்க்கும்” என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com