\
மேகதாது அணையை கட்டியே தீருவோம் - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி

மேகதாது அணையை கட்டியே தீருவோம் - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி

மேகதாது அணையை கட்டியே தீருவோம் - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி
Published on
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் அணை கட்ட முயற்சிக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசும் விவசாய அமைப்புகளும் நீண்ட காலமாக‌ எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு எதிராக‌ தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், காவிரியில் கர்நாடகாவுக்கு உரிமையுள்ளது எனவும், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்றும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும் அவர், மேகதாது விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது பற்றி கவலையில்லை எனவும் கூறியுள்ளார். முன்னதாக மேகதாது அணையை கட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com