ரூ.100க்கு பதிலாக ரூ.500 நோட்டுகள் - ஏடிஎம்மை சூழ்ந்த பொதுமக்கள்; பதறிப்போன வங்கி நிர்வாகம்!

ரூ.100க்கு பதிலாக ரூ.500 நோட்டுகள் - ஏடிஎம்மை சூழ்ந்த பொதுமக்கள்; பதறிப்போன வங்கி நிர்வாகம்!

ரூ.100க்கு பதிலாக ரூ.500 நோட்டுகள் - ஏடிஎம்மை சூழ்ந்த பொதுமக்கள்; பதறிப்போன வங்கி நிர்வாகம்!
Published on

பெங்களூருவில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்மில் ரூ.100க்கு பதிலாக ரூ.500 வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலை அறிந்த பொதுமக்கள் ரூ.1.7 லட்சம் வரை பணம் எடுத்துள்ளனர்

கர்நாடக மாநிலம் கொடகு மாவட்டத்தின் மடிக்கேரி பகுதியில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்மில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. காரணம் வேறொன்றும் இல்லை. அங்கு ரூ.100க்கு பதிலாக ரூ.500 வந்துள்ளது. இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவ அப்பகுதி மக்கள் அவசரம் அவசரமாக வந்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த தகவல் வங்கிக்கு தெரிவதற்கு முன்பே ரூ.1.7 லட்சத்தை பொதுமக்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.

அவசரம் அவசரமாக ஏடிஎம்க்கு வந்த வங்கி ஊழியர்கள் இது குறித்து விசாரித்துள்ளனர். பிறகு பணம் எடுத்த வாடிக்கையாளர்களை தொடர்புகொண்ட வங்கி நிர்வாகம் பணத்தை திரும்ப பெற்றுள்ளது. பலரும் பணத்தை கொடுக்க தயக்கம் காட்டி, இது வங்கியின் தவறு தானே என்று விவாதம் செய்துள்ளனர். ஆனாலும் பணத்தை வங்கி நிர்வாகம் திருப்பி வாங்கியுள்ளது.

இரண்டு வாடிக்கையாளர்கள் மட்டும் ரூ.65 ஆயிரமுடன் சென்றவிட்ட நிலையில் போலீசாரின் உதவியை வங்கி நிர்வாகம் நாடியுள்ளது. அந்த வாடிக்கையாளர்களை கண்டுபிடித்த காவலர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை திரும்ப பெற்றுள்ளனர். பணம் முழுவதையும் மீட்ட வங்கி நிர்வாகம் பணம் நிரப்பிய நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

பணம் நிரப்பிய நிறுவனம், ரூ.100 நோட்டுகள் வைக்கவேண்டிய இடத்தில் ரூ.500 நோட்டுகளை வைத்துள்ளது. இதனால் தான் இந்த தவறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com