கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் எல்லையிலேயே நிறுத்தப்படுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
மகதாயி நதியிலிருந்து கால்வாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் கலசா - பண்டூரி திட்டத்திற்கு நீர் திறக்க, கோவா அரசை வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கன்னட அமைப்புகள், விவசாய, வணிகர்கள் சங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால், முன்னெச்சரிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கர்நாடகாவிற்கு செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கர்நாடகாவிற்கு இயக்கப்படும் பேருந்துகளும் இரு மாநில எல்லையிலேயே நிறுத்தப்படுகின்றன. அதனால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

