Building collapsed
Building collapsedpt desk

கர்நாடகா: திடீரென இடிந்து விழுந்த பிரியாணி கடை - இடிபாடுகளில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு

கர்நாடக மாநிலம் கோணி குப்பா பகுதியில் பழைய கட்டடத்தில் இயங்கி வந்த ஆம்பூர் பிரியாணி கடை கட்டடம் திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
Published on

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் கோணி குப்பா பகுதியில் மைசூர் சாலையில் உத்தயா மற்றும் சிம்மையா ஆகிய இருவருக்கு சொந்தமான பழைய கட்டடத்தில் ஆம்பூர் பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று யாரும் எதிர்பாராத வகையில் ஆம்பூர் பிரியாணி உணவக கட்டடம் திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

Building collapsed
Building collapsedpt desk

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் போலீசார் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இடுப்பாட்டில் சிக்கிய 5க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக கோணிகுப்பா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Building collapsed
கர்நாடகா: பங்குதாரரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு ரியல் எஸ்டேட் அதிபர் எடுத்த விபரீத முடிவு

இந்த சம்பவம் குறித்து அறிந்த சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் மக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com