\
முந்துகிறது காங்கிரஸ், விரட்டுகிறது பாஜக!

முந்துகிறது காங்கிரஸ், விரட்டுகிறது பாஜக!

முந்துகிறது காங்கிரஸ், விரட்டுகிறது பாஜக!
Published on: 

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அந்தக் கட்சியை பாஜக பின் தொடர்ந்து விரட்டி வருகிறது.

கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின.
வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் இன்று எட்டு மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. பாஜகவும் அந்தக் கட்சியை தொடர்ந்து விரட்டி வருகிறது. காலை 8.30 நிலவரப்படி, காங்கிரஸ் 59 இடங்களிலும் பாஜக 49 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com