கர்நாடகா: நண்பர் வீட்டு மெகந்தி விழாவில் நடமாடிய நபர் மாரடைப்பால் உயிரிழப்பு

கர்நாடகா: நண்பர் வீட்டு மெகந்தி விழாவில் நடமாடிய நபர் மாரடைப்பால் உயிரிழப்பு

கர்நாடகா: நண்பர் வீட்டு மெகந்தி விழாவில் நடமாடிய நபர் மாரடைப்பால் உயிரிழப்பு
Published on

உடுப்பியில் உள்ள அம்பாகிலுவில் நேற்றிரவு மெஹந்தி விழாவில் நடனமாடிய நபர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி டவுன் அம்பாகிலு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி ஆச்சார்யா (56). இவர், தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கிற்காக வசூல் செய்யும் பணி செய்துவந்தார், இந்த நிலையில் நேற்றிரவு இவர், தன் நண்பர் வீட்டு மெஹந்தி விழாவிற்குச் சென்றிருந்தார்.

அப்போது இரவு உணவு முடிந்து அங்கு நடனமாடிக் கொண்டிருந்தவர்களோடு இணைந்து கணபதி ஆச்சாரியாவும் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது கணபதி ஆச்சாரியா சோர்வடைந்து திடீரென மயங்கி தரையில் விழுந்தார்.

இதையடுத்து உடனடியாக அவரை மணிப்பால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com