\
கர்நாடகா: கபினி வனப்பகுதியில் 3 குட்டிளுடன் சுற்றித்திரியும் தாய் புலி

கர்நாடகா: கபினி வனப்பகுதியில் 3 குட்டிளுடன் சுற்றித்திரியும் தாய் புலி

கர்நாடகா: கபினி வனப்பகுதியில் 3 குட்டிளுடன் சுற்றித்திரியும் தாய் புலி
Published on

கபினி வனப்பகுதியில் மூன்று குட்டிகளுடன் சுற்றித்திரியும் தாய் புலியின் காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள நாகர்ஹொளே புலிகள் காப்பகத்தில் ஒரு பகுதியாக உள்ளது கபினி வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புலிகளை புகைப்படம் எடுக்க விரும்புபவர்கள் கபினி வனப்பகுதியை அதிகமாக தேர்வு செய்வார்கள்.

இந்த நிலையில் கபினி வனப்பகுதியில் மூன்று குட்டிகளுடன் சுற்றித்திரியும் தாய் புலியின் காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நேற்று மாலை கபினி வனப்பகுதியில் இந்த காட்சியை பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பொதுவாக குட்டிகளுடன் புலியை காண்பது அரிதான கட்சியாகும். அவ்வாறு இருக்கையில் ஒரே நேரத்தில் மூன்று குட்டிகளுடன் புலியை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com