கர்நாடகா: மணல் லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் மணல் லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்pt desk

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் பீலகி படதின்னி கிராமத்தில் சேர்ந்தவர்கள் யங்கப்பா (50) - யல்லவ்வா (45) தம்பதியர். இவர்களது மகன் புந்தலிகா (22), மகள் நாகவ்வா (20). இவர்கள் நால்வரும், நாகவ்வாவின் கணவர் அசோக் (24) உடன் இணைந்து வயலில் வேலை செய்துள்ளனர். 5 பேரும் வேலையை முடித்துவிட்டு சாலையோரம் நின்றிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியின் பின்பக்க டயர் வெடித்துள்ளது.

Lorry Accident
Lorry Accidentpt desk

இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் நின்றிருந்த ஐந்து பேர் மீதும் மோதி கவிழ்ந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீலகி போலீசார், லாரி கிரேன் உதவியுடன் தூக்கி, லாரியின் அடியில் சிக்கியிருந்த ஐந்து பேரையும் சடலமாக மீட்டனர்.

சம்பவம் நடந்த இடம்
கோவை வெள்ளியங்கிரி மலையேறியவர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு; 2 மாதங்களில் 6 பேர் மரணம்!

இதையடுத்து 5 உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com