கர்நாடகா: கருகிய நிலையில் காரில் இருந்த 3 சடலங்கள் - ஏரியில் கார்..?

தும்கூரில் மூன்று சடலங்களுடன் எரிந்த நிலையில் தண்ணீர் இல்லாத ஏரியில் கிடந்த காரை கைப்பற்றிய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Car
Carpt desk

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே குஞ்சங்கி கிராமத்தில் தண்ணீர் இல்லாத ஏரியில், எரிந்த நிலையில் கார் ஒன்று இருந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது எரிந்த காரின் உள்ளே மூன்று சடலங்கள் கருகிய நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Police investigation
Police investigationpt desk

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காரில் இருந்த நம்பர் பிளேட்டை வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தட்சிண கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த ரஃபீக் என்பவரின் பெயரில் அந்த கார் பதிவாகி இருந்தது தெரியவந்தது ஆனால், இறந்தவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அந்த காருக்குள்; இருந்த சடலங்களை மீட்ட போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தண்ணீர் இல்லாத இந்த ஏரியில் கார் எப்படி வந்தது?. காருக்கு யார் தீ வைத்தது?. கொலை செய்து காருடன் எரித்தார்களா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com