காலையிலேயே குடிபோதையில் பாடம் நடத்திய ஆசிரியை - கையும் களவுமாக சிக்கிய பின்னணி!

காலையிலேயே குடிபோதையில் பாடம் நடத்திய ஆசிரியை - கையும் களவுமாக சிக்கிய பின்னணி!
காலையிலேயே குடிபோதையில் பாடம் நடத்திய ஆசிரியை - கையும் களவுமாக சிக்கிய பின்னணி!

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிக்கசாரங்கி தொடக்கப்பள்ளியில், அதிகாலையில் மது அருந்திவிட்டு பள்ளியில் பணியாற்றிய பெண் ஆசிரியை ஒருவர் கையும் களவுமாக பிடிபட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிக்கசாரங்கி தொடக்கப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியை கங்கலக்ஷம்மா பணியாற்றி வருகிறார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் பாடம் நடத்தும் போது மது அருந்தி, மாணவர்களை அடிப்பது, சக ஊழியர்களிடம் சண்டை போடுவது போன்றவற்றை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி தடைபட்டது.

இதை உணர்ந்த பெற்றோர், தவறை திருத்தும்படி ஆசிரியை கங்கலக்ஷம்மாவை எச்சரித்துள்ளனர். ஆனால் கங்களாக்ஷம்மா மனம் மாறவில்லை. இதனால் பள்ளிக்கு பூட்டு போட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பிஇஓ ஹனுமா நாயக் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆசிரியர் மேஜையின் டிராயரை திறக்க கிராம மக்கள் வலியுறுத்தினர்.

பிஇஓ ஹனுமா நாயக் ஆசிரியையின் டிராயரை அவர் திறக்கச் சென்றபோது, அதை ஆசிரியை கங்களாக்ஷம்மா எதிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மேஜையை வெளியே கொண்டு வந்து டிராயரின் பூட்டை உடைத்தனர். அப்போது டிராயரில் ஒரு முழு ஃபுல் பாட்டில் எம்.எச் பிராண்டி இருந்தது. உள்ளே இரண்டு காலி மதுபாட்டில்கள் கிடந்தன.

இதனைப் பார்த்த பள்ளிக்கல்வி அலுவலர் ஆசிரியை கங்களாக்ஷம்மா மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி குழந்தைகளின் பெற்றோரிடம் வாக்குறுதி அளித்தார். அதன் பின்னர் பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து கலைந்து சென்றனர். ஆசிரியையின் டிராயரில் இருந்து மதுபாட்டில்களை பொதுமக்கள் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com