அடப்பாவிகளா: நம்பி வந்தது காதல் ஜோடி: கர்ப்பிணியை எரித்தது குடும்பம்!

அடப்பாவிகளா: நம்பி வந்தது காதல் ஜோடி: கர்ப்பிணியை எரித்தது குடும்பம்!

அடப்பாவிகளா: நம்பி வந்தது காதல் ஜோடி: கர்ப்பிணியை எரித்தது குடும்பம்!
Published on

காதலித்து திருமணம் செய்த கர்ப்பிணி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ளது குண்டக்கனல் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த சரணப்பா (25)வும் பானு அட்டாரும் (21) காதலித்து வந்தனர். சரவணப்பா லாரி டிரைவராக இருக்கிறார். ஒரே ஊர் என்றாலும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். ஒரு கட்டத்தில் காதல் இரண்டு பேரின் குடும்பங்களுக்குத் தெரிய வந்தபோது பிரச்னை ஏற்பட்டது. அடிக்கடி குடும்பங்களுக்குள் தகராறு. எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். கோவாவில் இருவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் பானு கர்ப்பமானார். குடும்பத்தில் கோபம் குறைந்திருக்கும் என்று நம்பி ஊருக்கு வந்தார் பானு. பிறகு தான் கர்ப்பமான செய்தியுடன் சொந்த வீட்டுக்குச் சென்றார் சரவணப்பாவுடன்.

கோபம் குறைந்து வரவேற்பார்கள் என்று எதிர்பார்த்தால், அவர்கள் ஆக்ரோஷமாக அடிக்கத் துவங்கினர். பின்னர் சரவணப்பாவை அடித்து வெளியே தள்ளிவிட்டு பானு மீது தீ வைத்தனர். அவர் அலறியபடி ஓடினார். சரவணப்பா ஓடிச் சென்று அவரைக் காப்பாற்ற முயன்றார். இதனால் அவர் மீதும் தீ பிடித்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்து அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பானு பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து சரவணப்பா கொடுத்த புகாரின் பேரில் பானுவின் அம்மா, ரம்ஜான்பீ, சகோதரி டவால்பி, சகோதரியின் கணவர் ஜிலானி, சகோதரர் அக்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காதலித்து திருமணம் செய்த கர்ப்பிணியை குடும்பத்தினரே உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com