இந்தியா
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார் சிறுமி: மீட்புப் பணி தீவிரம்
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார் சிறுமி: மீட்புப் பணி தீவிரம்
கர்நாடக மாநிலம் பெல்காமில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 6 வயது சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெல்காமில் உள்ள ஜுன்ஜாராவாடி எனும் கிராமத்தில் காவேரி என்ற சிறுமி விளையாடி கொண்டிருந்தாள். அப்போது தவறுதலாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்ததாகத் தெரிகிறது. 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 57ஆவது அடியில் சிறுமி சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. புனேவில் இருந்து வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.