\
கர்நாடகா: ஆற்றைக் கடக்க முயன்ற 4 பெண்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு.!

கர்நாடகா: ஆற்றைக் கடக்க முயன்ற 4 பெண்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு.!

கர்நாடகா: ஆற்றைக் கடக்க முயன்ற 4 பெண்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு.!
Published on: 

கர்நாடகா மாநிலம் கொப்பல் பகுதியில் பெய்த கனமழையின் போது ஆற்றைக் கடக்க முயன்ற 4 பெண்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

சங்கனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த அவர்கள் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வரும் வழியில் உள்ள ஆற்றில், மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அதனைப் பொருட்படுத்தாமல் நான்கு பேரும் ஆற்றைக் கடக்க முற்பட்டனர். அப்போது நான்கு பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள்.

தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் நான்கு பேரின் உடல்களையும் மீட்டனர். அந்தப் பகுதியில் தரைப்பாலம் இல்லாததன் காரணமாகவே உயிரிழப்பு நேரிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com