கர்நாடக பேருந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
கர்நாடக மாநிலத்தில் கால்வாய்க்குள் விழுந்த பேருந்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரம் கனகனமாரடியில் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் ஏராளமானோர் இருந்தனர். அப்போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் இருந்த கால்வாய்க்குள் கவிழ்ந்தது.
கால்வாய்க்குள் பாய்ந்த பேருந்து பக்காவட்டில் சாந்த நிலையில், பேருந்து முழுவதுமாக நீருக்குள் மூழ்கியது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 15 பேர் உயிரிழந்தாகவும் அவர்களில் பெரும்பாலானோர் மாணவா்கள்.
இதில் 15 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்டது. இப்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்து கிராம மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு பலரை காப்பாற்றியுள்ளனர்.
இந்த துயர சம்பவத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.
இந்த விபத்தை அடுத்து கர்நாடக அரசு, இன்று நடைபெறுவதாக இருந்த மாநில சினிமா விருது விழாவை தள்ளி வைத்துள்ளது.