\
தலைமறைவாக உள்ள நீதிபதி கர்ணன் ஓய்வு பெறுகிறார்

தலைமறைவாக உள்ள நீதிபதி கர்ணன் ஓய்வு பெறுகிறார்

தலைமறைவாக உள்ள நீதிபதி கர்ணன் ஓய்வு பெறுகிறார்
Published on

உச்ச நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முதல் உயர் நீதிமன்ற நீதிபதி என்ற பெயரைப் பெற்ற நீதிபதி கர்ணன் இன்று ஓய்வு பெறுகிறார். 

தமிழகத்தைச் சேர்ந்தவர் நீதிபதி கர்ணன். இவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது, சக நீதிபதிகள் மீது ஊழல் புகார்களை கூறியிருந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இவர் மீது விசாரணை நடத்தி வருகிறது. கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் அவர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ளார். அவரை கொல்கத்தா போலீசார் தேடி வருகின்றனர். எனினும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை கோரி கர்ணன் மனு செய்திருந்தார். இதை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். இந்நிலையில் அவர் பதவி காலம் நேற்றோடு முடிவடைந்துவிட்டது. இதையடுத்து தலைமறைவாக இருக்கும் அவர் ஓய்வு பெறுகிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com