டர்பன் அணிந்த சீக்கிய சிறுவனுக்கு சீட் மறுப்பு - கர்நாடக பள்ளிக்கு வலுக்கும் எதிர்ப்பு

டர்பன் அணிந்த சீக்கிய சிறுவனுக்கு சீட் மறுப்பு - கர்நாடக பள்ளிக்கு வலுக்கும் எதிர்ப்பு
டர்பன் அணிந்த சீக்கிய சிறுவனுக்கு சீட் மறுப்பு - கர்நாடக பள்ளிக்கு வலுக்கும் எதிர்ப்பு

டர்பன் அணிந்திருப்பதால் 6 வயது சீக்கிய சிறுவனுக்கு எல்கேஜி சீட் தர கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பூதாகரமானதை அடுத்து, மதம் சார்ந்த உடைகளை அணிந்து கல்வி நிலையங்களுக்கு மாணவர்கள் செல்லக் கூடாது என அம்மநில உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனால் ஹிஜாப், பர்தா அணிந்து செல்லும் மாணவிகளை கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனுமதிக்க மறுத்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்காக தங்கள் 6 வயது மகனை ஒரு சீக்கிய பெற்றோர் அழைத்து வந்துள்ளனர். அப்போது அவர்களை நேர்காணலுக்கு அழைத்த பள்ளி தலைமை ஆசிரியை, 'மத அடையாளமான டர்பனையும், இரும்பு காப்பையும் அணிந்திருப்பதால் உங்கள் குழந்தைக்கு சீட் தர முடியாது" எனக் கூறியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல வாரியத்திற்கு புகார் அளித்துள்ளது. டர்பன் அணிந்திருந்ததால் சீக்கிய சிறுவனுக்கு பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com