death house
death housept desk

தந்தை உயிரிழந்த சோகத்திலும் 10 ஆம் வகுப்பு தேர்வெழுத வந்த மாணவி - காரைக்காலில் நெகிழ்ச்சி

காரைக்கால் அருகே தந்தை உயிரிழந்த நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வெழுத வந்த மாணவிக்கு ஆசியர்கள் ஆறுதல் கூறினர்.
Published on

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு அடுத்துள்ள சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயக்குமார் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் கடைசி மகள் அம்பகரத்தூரில் உள்ள திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் நிலையில், தந்தை விஜயக்குமார் இன்று அதிகாலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து தேர்வை எதிர்கொள்ள தயாராக இருந்த மாணவி, தந்தை உயிரிழந்த சோகத்தில் கதறி அழுதார்.

இதையடுத்து மனம் தளராத மாணவி இன்று 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத முடிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து தந்தை உயிரிழந்த சோகத்திலும் பள்ளிக்கு தேர்வெழுத வந்த மாணவிக்கு ஆறுதல் கூறிய ஆசிரியர்கள், மாணவியை ஊக்கப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com