காரைக்கால்: "இந்த சைக்கிளையா மாணவர்களுக்கு கொடுக்குறீங்க..” - இலவச சைக்கிளைப் பார்த்து ஷாக் ஆன MLA!

காரைக்காலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சைக்கிள் வழங்க வந்த திமுக எம்.எல்.ஏ., அவை முழுவதுமாக துருப்பிடித்து இருந்ததால் புதிய சைக்கிள்களை வழங்க உத்தரவிட்டார்.

காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காரைக்காலில் உள்ள திருப்பட்டினம் தொகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் அங்கு இருந்த சைக்கிள்களை ஆய்வு செய்தார்.

அப்போது சைக்கிள்கள் முழுவதுமாக துருப்பிடித்து இருந்ததுடன், அவற்றில் இருந்து ஒவ்வொரு பாகமாக கழன்று வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ மாணவர்களுக்கு இந்த சைக்கிளை வழங்கக்கூடாது என கல்வித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், இந்த சைக்கிள்களை மீண்டும் திரும்பப் பெற்று புதிய சைக்கிளை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com