ராகுல் காந்தியின் ஆவேசப் பேச்சு: எதிர்ப்பு தெரிவித்து அடங்கிய கபில் சிபல் !

ராகுல் காந்தியின் ஆவேசப் பேச்சு: எதிர்ப்பு தெரிவித்து அடங்கிய கபில் சிபல் !
ராகுல் காந்தியின் ஆவேசப் பேச்சு: எதிர்ப்பு தெரிவித்து அடங்கிய கபில் சிபல் !

காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டியதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் அதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட கபில் சிபல் பின்பு அதனை நீக்கியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்ற காரிய கமிட்டி இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கியது. அப்போது ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை ஒன்றை முன்வைத்தார். சோனியா காந்திக்கு எதிராக கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்றும், பாஜகவுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் பகிரங்கமாக ராகுல்காந்தி குற்றஞ்சாடியதாக செய்திகள் வெளியாகியது. இந்த செய்தி கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

இதனையடுத்து, பாஜகவுக்கு உதவுவதற்காக இதை செய்தோம் அல்லது அதன் உத்தரவின் பேரில் இதைச் செய்வதாக சொன்னால் ராஜினாமா செய்வேன் என்று குலாம் நபி ஆசாத் கூறினார். பாஜகவுடன் தொடர்பு என்று நிரூபித்துவிட்டால் அரசியலை விட்டு விலகத் தயார் எனவும் தெரிவித்தார்.

கபில் சிபல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்காக விசுவாசமாக பணியாற்றி வருகிறேன். 30 வருடங்களில் பாஜகவிற்கு சாதகமான எந்த ஒரு கருத்தையும் தெரிவித்தது இல்லை" என தெரிவித்தார்.

இந்நிலையில் சற்று நேரத்திற்கு பின்பு மீண்டும் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கபில் சிபல் அதில் "ராகுல் காந்தியே என்னை தனிப்பட்ட முறையில் அழைத்துப்பேசினார். அவ்வாறு நான் எதுவும் கூறவில்லை என தெரிவித்தார். இதனால் நான் என்னுடைய முந்தையப் பதிவை நீக்குகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com