அரவிந்த் கெஜ்ரிவால் கறுப்பு பணம் மாற்றினார் - கபில் மிஷ்ரா
டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் சக அமைச்சர் சத்தியேந்திர ஜெயினிடம் இருந்து ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக கபில் மிஷ்ரா பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இதையடுத்து அவர் அமைச்சர் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக கபில் மிஸ்ரா தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று 5 ஆவது நாளாக அவருடைய போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில் கபில்மிஸ்ரா செய்தியார்களிடம் கூறியதாவது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கறுப்பு பணம் மாற்றியதற்கு ஆதாரம் உள்ளது. அவர் பண மோசடியில் ஈடுபட்டார். மொகாலா கிளினிக் மோசடியை வெளிப்படுத்துவேன். இது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். 45 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆம் ஆத்மி இணையதளத்தில் வெறும் ரூ.19 கோடி மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத்திற்கு தவறான வங்கி விபரத்தை தெரிவித்துள்ளது. நன்கொடை விபரத்தையும் ஆம் ஆத்மி மறைத்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி தலைவர்கள் பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று கபில் மிஷ்ரா கூறினார்.