கிராமங்களின் கன்னட பெயரை மாற்றிய கேரளா: கர்நாடகா எதிர்ப்பு

கிராமங்களின் கன்னட பெயரை மாற்றிய கேரளா: கர்நாடகா எதிர்ப்பு

கிராமங்களின் கன்னட பெயரை மாற்றிய கேரளா: கர்நாடகா எதிர்ப்பு
Published on
காசர்கோடு மாவட்டத்தில் கன்னட மொழியில் இருந்த கிராமங்களின் பெயர்களை மலையாள மொழியில் மாற்றியுள்ளது கேரளா.
கேரளாவின் காசர்கோடு மாவட்டம், கேரள - கர்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கன்னடம் பேசும் அதிகமான மக்கள் எல்லையோர கிராமங்களில் வசித்து வருகின்றனர். இதனால் காசர்கோடு மாவட்டத்தில் சில கிராமங்களின் பெயர் கன்னடத்தில் உள்ளது. இந்த நிலையில் கேரளாவின் உள்ளாட்சி அமைப்புகள் சில கிராமங்களின் பெயரை மாற்றியுள்ளன.
மதுரு என்ற கிராமத்தின் பெயரை மதுரம் என்றும், மல்லா என்பதை மல்லம் என்றும் மாற்றியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு கர்நாடக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா , கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ''கன்னட - மலையாள மக்கள் பரஸ்பரம் ஒற்றுமையாக சகோதரர்கள் போன்று வாழ்கின்றனர். அங்கு வசிக்கும் மக்களுக்கு மொழி விஷயத்தில் எப்போதும் பிரச்னை வந்தது இல்லை. இதை நாம் தொடர்ந்து காப்பாற்றி கொண்டு செல்ல வேண்டியது அவசியம்'' என்று எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறுகையில், ''காசர்கோடு கர்நாடகத்துடன் பின்னி பிணைந்துள்ள பகுதி. அது கேரளாவில் இருந்தாலும் அங்கு வசிக்கும் மக்களில் பாதிக்கு மேல் கன்னட மொழி பேசுபவர்கள். காசர்கோடுவில் வசிக்கும் கன்னடர்களின் பண்பாட்டு உணர்வுகளை காப்பாற்ற வேண்டியது இரு மாநிலங்களின் கடமை'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com