பெற்றோர் நினைவிடம் அருகிலேயே அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம்

பெற்றோர் நினைவிடம் அருகிலேயே அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம்

பெற்றோர் நினைவிடம் அருகிலேயே அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம்
Published on

மறைந்த கன்னட பவர்ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நிறைவடைந்து, அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சடங்குகளுக்காக, புனித் ராஜ்குமாரின் உடல் அலங்கார ஊர்தியில் கொண்டு வரப்பட்டிருந்தது. தனது தந்தை, தாய் அடக்கம் செய்யப்பட்ட ஸ்ரீ கனடிர்வா ஸ்டுடியோ அருகேயே நடிகர் புனித்தின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. புனித்தின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கன்னட சினிமா நடிகர் மற்றும் தயாரிப்பாளரான புனித் ராஜ்குமார், மாரடைப்பு காரணமாக பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். புனித்தின் மகள், அமெரிக்காவில் நேற்று மாலைதான் இந்தியா வந்தடைந்தார் என்பதால், இன்று அவருடைய உடலுக்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இறுதிச் சடங்கில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா - எடியூரப்பா, தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் அமைச்சர்கள் பலரும் பங்கேற்று நிகழ்வில் வருகின்றனர். உடன் நடிகர்கள் பலரும் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com