\
ஹிஜாப் வழக்கை விசாரித்த நீதிபதிக்கு எதிராக ட்வீட் - கன்னட நடிகர் கைது

ஹிஜாப் வழக்கை விசாரித்த நீதிபதிக்கு எதிராக ட்வீட் - கன்னட நடிகர் கைது

ஹிஜாப் வழக்கை விசாரித்த நீதிபதிக்கு எதிராக ட்வீட் - கன்னட நடிகர் கைது
Published on

ஹிஜாப் வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக ஆட்சேபகரமான ட்வீட் செய்ததற்காக கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சா கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்தியப் பிரிவு காவல் துணை ஆணையர் எம்.என்.அனுசேத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னட திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான சேத்தன் அஹிம்சா பெங்களூரு நகர காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிஜாப் வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக சர்ச்சைக்குரிய ட்வீட் செய்ததற்காக, ஷேஷாத்ரிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமையன்று அவர் மீது ஐபிசியின் 505(2) மற்றும் 504 இன் பிரிவின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது" எனத் தெரிவித்தார்

கன்னட நடிகர் சேத்தன் அஹிம்சா, ஹிஜாப் சர்ச்சை குறித்து விமர்சித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துவந்தார். மேலும் சில நாட்களுக்கு முன்பு பெங்களுருவில் நடைபெற்ற அம்பேத்கர் ஆதரவு அமைப்புகள் நடத்திய பேரணி குறித்தும் தொடர்ச்சியாக பல ட்வீட்களை பதிவு செய்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com