டெல்லி கார் விபத்து: உயிரிழந்த பெண் மது போதையில் இருந்தாரா? - வெளியான உள்ளுறுப்பு அறிக்கை

டெல்லி கார் விபத்து: உயிரிழந்த பெண் மது போதையில் இருந்தாரா? - வெளியான உள்ளுறுப்பு அறிக்கை
டெல்லி கார் விபத்து: உயிரிழந்த பெண் மது போதையில் இருந்தாரா? - வெளியான உள்ளுறுப்பு அறிக்கை

டெல்லியில் புத்தாண்டு அன்று காரில் சிக்கி உயிரிழந்த பெண் குடிபோதையில் இருந்துள்ளது உள்ளுறுப்பு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

டெல்லியின் கஞ்சவாலா பகுதியில், கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி இரவு, இளம்பெண் ஒருவர் காரில் சிக்கி பல கிலோமீட்டர் தூரம் சாலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விபத்தில் பலியான அஞ்சலி தொடர்பான முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.

இறந்த அஞ்சலி சிங்கின் உள்ளுறுப்பு தொடர்பான அறிக்கையில், விபத்து நடந்த அன்று இரவு அஞ்சலி மது அருந்தியிருப்பது தெரியவந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, சம்பவம் நடந்த புத்தாண்டு அன்று அஞ்சலி அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக அவரது தோழி நிதி கூறியிருந்தார். அத்துடன் கொண்டாட்டத்திற்காக ஒரு ஹோட்டல் பார்ட்டிக்கு சென்றதாக காவல்துறையிடம் ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தார்.

இருப்பினும் , அஞ்சலியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மது அருந்தியதை வெளிப்படுத்தவில்லை, இதற்கிடையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உள்ளுறுப்புகளை டெல்லி ரோகினி பகுதியில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில் ஆய்வு அறிக்கையில் , விபத்து நடந்த போது அஞ்சலி குடிபோதையில் இருந்ததாக அதில் தெரியவந்துள்ளது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது

பிரேத பரிசோதனைகள் நம்பத்தகாத நிலையில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறப்புக்கான காரணத்தை கண்டறிய உடலின் உள்ளுறுப்பு அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்தச் சோதனைகளில், உடலின் உள் உறுப்புகள், மார்பு, வயிறு அல்லது இடுப்புப் பகுதியில் உள்ளவை முழுமையாகப் பரிசோதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com