‘NEXT ’ தேர்வை கைவிட கனிமொழி வலியுறுத்தல்

‘NEXT ’ தேர்வை கைவிட கனிமொழி வலியுறுத்தல்

‘NEXT ’ தேர்வை கைவிட கனிமொழி வலியுறுத்தல்
Published on

தேசிய அளவிலான ‘NEXT ’ தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

எம்டி மற்றும் எம்எஸ் ஆகிய முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைமுறையை கைவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு பதிலாக NATIONAL EXIT TEST அதாவது தேசிய நிறைவு நிலைத் தேர்வு என்ற பெயரில் புதிதாக தேர்வு நடத்த உள்ளதாக தெரிகிறது.

இதனால் எம்பிபிஎஸ் படிப்பு முடித்த பிறகு மருத்துவ பணியை தொடங்குவதற்கான உரிமம் பெறுவதற்கு தனித் தேர்வு எழுத தேவையில்லை என்றும், தேசிய நிறைவு நிலைத் தேர்வு முடிவுகளே போதுமானது என்றும் திருத்தப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் ஒரு அம்சம் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இம்மசோதா விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தேசிய அளவிலான NEXT  தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக எம்.பி.யான கனிமொழி மக்களவையில் வலியுறுத்தியுள்ளர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com