காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்களா கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி?

காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்களா கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி?
காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்களா கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி?

தேசிய அரசியலில் ஒரு பெரிய திருப்பமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைவர் கன்னையா குமார் மற்றும் ராஷ்ட்ரிய தலித் அதிகார மன்ச் (ஆர்டிஏஎம்) எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் செப்டம்பர் 28 அன்று காங்கிரசில் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி அன்று ராகுல் காந்தியால் இரண்டு இளம் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்படுவார்கள் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் பகத் சிங்கின் பிறந்த நாளான செப்டம்பர் 28 -ம் தேதிக்கு இந்த இணைப்பு மாற்றப்பட்டுள்ளது.

பட்டியல் இன தலைவரும், குஜராத்தின் வட்காம் தொகுதியின் எம்எல்ஏவுமான ஜிக்னேஷ் மேவானியை காங்கிரஸ் மாநில பிரிவின் செயல் தலைவராக நியமிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னையா குமார் காங்கிரசில் இணைந்து பீகாரில் கட்சியை பலப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் பட்டியலின முதல்வர் வேட்பாளர் நியமமுடிவைப் பாராட்டி ஜிக்னேஷ் மேவானி, "சரண்ஜித் சிங்கை பஞ்சாப் முதல்வராக நியமிக்கும் ராகுல்காந்தியின் முடிவு பட்டியல் இன மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்என தெரிவித்தார்.

குஜராத் பாஜகவிலும் சமீபத்தில் இதேபோன்ற மாற்றம் செய்யப்பட்டது, அங்கு முதல்வராக இருந்த விஜய் ரூபானி மாற்றப்பட்டு பூபேந்திர படேல் முதல்வராக்கப்பட்டார். குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com