\
ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட முதல் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்

ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட முதல் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்

ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட முதல் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்
Published on: 

மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட  முதல் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இவருக்கு  சி.ஆர்.பி.எஃப் இன் உயரடுக்கு கமாண்டோக்களால் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குக்கு பெயர்போனவர் கங்கனா ரனாவத். இவர் மும்பையை “மினி பாகிஸ்தான்”என்று கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார், இதன் காரணமாக மஹாராஸ்டிராவின் பல்வேறு அரசியல் கட்சியினரும், சிவசேனா அரசும் அவரை கடுமையாக எதிர்த்துவருகிறது. இதனை எதிர்த்து நான் மும்பைக்கு வருவேன், முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்று கங்கனா ரனாவத் சவால் விட்டிருந்தார்.

இந்த சூழலில்தான் அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நாட்டின் உயர்ந்த பாதுகாப்பான ஒய்-பிளஸ் பாதுகாப்பினை வழங்கியுள்ளது. இந்த பாதுகாப்பு வழங்கப்பட்ட முதல் பாலிவுட் நட்சத்திரம் இவர்தான்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com