மத்தியப்பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு

மத்தியப்பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு

மத்தியப்பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு
Published on

மத்தியப்பிரதேச மாநில முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகின. இதில் மிசோரமில் எம்.என்.எஃப் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸும், தெலங்கானாவில் சந்திரசேகர் ராவும் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இந்தத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவிலான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பல அரசியல் விமர்சகர்களும் இந்தத் தேர்தலின் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் எனத் தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பாஜக இந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி கண்டது. பாஜக 109 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 116 தொகுதிகள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் 2 இடங்களில் வெற்றி கண்ட பகுஜன் சமாஜ், 1 இடத்தில் வெற்றி பெற்ற சமாஜ் வாதி ஆகியவை காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன

இதையடுத்து அம்மாநில ஆளு‌ர் ஆனந்திபென் படேலை ச‌ந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ். இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநில முதல்வரை தேர்ந்தெடுக்க போபாலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்குப் பின் கமல்நாத்தை முதல்வராக தேர்ந்தெடுப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்நாத் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். மேலும் மத்திய பிரதேசத்திலிருந்து 9 முறை மக்களவைக்கு தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com