கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்... காங்கிரஸ் தலைவரை கைகாட்டும் ஜே.பி.நட்டா!

கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு சம்பவத்தில் காங்கிரஸ் கட்சித்தலைவர் மெளனம் காப்பது ஏன் என்று பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜேபி நட்டா
ஜேபி நட்டாpt web

கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு சம்பவத்தில் காங்கிரஸ் கட்சித்தலைவர் மெளனம் காப்பது ஏன் என்று பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், விஷ சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தவும், அமைச்சர் முத்துசாமியை பதவி விலகக்கோரியும் இந்தியா கூட்டணி, தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்று கோரியுள்ளார். ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என்றாலும், இந்த பிரச்னை குறித்து குறைந்தபட்சம் குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பு நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com