\
மானசரோவர் யாத்திரைக்கு சீனா திடீர் தடை!

மானசரோவர் யாத்திரைக்கு சீனா திடீர் தடை!

மானசரோவர் யாத்திரைக்கு சீனா திடீர் தடை!
Published on: 

இந்தியாவிலிருந்து சீனப் பகுதியில் அமைந்துள்ள மானசரோவர் பகுதிக்குச் செல்ல, இந்திய பக்தர்களுக்கு சீனா அனுமதியளிக்க மறுத்துள்ளது.

கைலாய -மானசரோவர், திபெத் தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஏராளமான இந்தியர்கள் இந்தப் பகுதிக்கு புனிதப்பயணம் மேற்கொள்வது வழக்கம். சீனாவின் சாலையை பயன்படுத்தி இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இயற்கை சீற்றம் காரணமாக சீனப் பகுதியிலுள்ள சாலைகள் மோசமடைந்துள்ளதாகவும் அது சரியான பிறகு பயணத்தைத் தொடரலாம் என்று சீன அதிகாரிகள் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறையினர் சீன அதிகாரிகளிடம் பேசிவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com