\
சோனியா காந்தி கட்சியின் தலைவராகத் தொடர வேண்டும் - கே.எஸ்.அழகிரி

சோனியா காந்தி கட்சியின் தலைவராகத் தொடர வேண்டும் - கே.எஸ்.அழகிரி

சோனியா காந்தி கட்சியின் தலைவராகத் தொடர வேண்டும் - கே.எஸ்.அழகிரி
Published on

சோனியாகாந்தி கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “சோனியாகாந்தி கட்சியின் தலைவராக தொடர வேண்டும். கோடிக்கணக்கான இந்திய மக்களும், காங்கிரஸ் கட்சியின் செயல் மறவர்களும் சோனியா, இராகுலை பின் பற்றுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியாகாந்தி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கே.எஸ்.அழகிரி இந்த டிவிட்டை பதிவு செய்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com