இந்திய கடலோர காவல்படை இயக்குநராக கே.நடராஜன் நியமனம்

இந்திய கடலோர காவல்படை இயக்குநராக கே.நடராஜன் நியமனம்
இந்திய கடலோர காவல்படை இயக்குநராக கே.நடராஜன் நியமனம்

இந்திய கடலோர காவல்படை புதிய இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை மேற்கு மண்டல கடலோர காவல்படையின் கூடுதல் இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு இதை அறிவித்துள்ளது.

தற்போது இந்த பதவியில் இருக்கும் ராஜேந்திர சிங்கின் பதவி காலம் வரும் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து ஜூலை 1 ஆம் தேதி முதல் நடராஜன் புதிய இயக்குநராகப் பதவியேற்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com