\
ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா தொற்று உறுதி

ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா தொற்று உறுதி

ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா தொற்று உறுதி
Published on

பாஜக தலைவர்களுள் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அவரது தாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாஜக தலைவர்களுள் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்குக் கடந்த நான்கு நாட்களாக கொரோனா அறிகுறிகள் இருந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா உறுதியானதால் தற்போது அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அவரின் தாயாரான மாதவி ராஜீ சிந்தியா கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாத போதும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com