\
விமானத்திற்குள் நுழையும்போது இனி இசை உங்களை வரவேற்கும்

விமானத்திற்குள் நுழையும்போது இனி இசை உங்களை வரவேற்கும்

விமானத்திற்குள் நுழையும்போது இனி இசை உங்களை வரவேற்கும்
Published on

விமான நிலையம் மற்றும் விமானத்திற்குள் நுழையும்போது விரைவில் உங்களை மனதிற்கு இதமான இசை வரவேற்கவுள்ளது.

இதற்கான அறிவுறுத்தலை விமான நிலைய நிர்வாகங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்திய கலாசார உறவுக்கான கவுன்சில் இதுகுறித்து விடுத்த கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

அதன்படி, விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் இந்திய பாரம்பரிய இசை, பயணிகளை வரவேற்க உள்ளது. சிதார், ஷெனாய் உள்ளிட்ட வாத்திய இசையை ஒளிபரப்ப சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஒப்புதல் அளித்திருப்பதாக இந்திய கலாசார உறவுக்கான கவுன்சிலின் தலைவர் வினய் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com