\
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் எஸ்.ஏ.பாப்டே

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் எஸ்.ஏ.பாப்டே

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் எஸ்.ஏ.பாப்டே
Published on: 

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டே இன்று பதவியேற்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. பொதுவாக தலைமை நீதிபதி ஓய்வு பெறும்போது, அந்த பொறுப்புக்கு ஒருவரை பரிந்துரை செய்வது மரபு. அந்த வகையில் மூத்த நீதிபதியாக உள்ள சரத் அரவிந்த் பாப்டேவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு, ரஞ்சன் கோகாய் மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தார். 

அதன்படி 47-ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.ஏ பாப்டே இன்று பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். 

பாப்டே, வரும் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருப்பார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com