
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்கவுள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய். அசாமில் வழக்கறிஞராக பணியாற்றிய பிறகு 2001-ம் ஆண்டு கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியானார். 2012-ம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 6 ஆண்டுகளுக்குப் பின் தற்போது தலைமை நீதிபதியாக உயர்ந்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக, ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் அடுத்தாண்டு நவம்பர் 17-ம் தேதி வரை உள்ளது.