"இந்திய சூழலுக்கு ஏற்ப நீதி நடைமுறைகளை மாற்ற வேண்டும்" - தலைமை நீதிபதி என்.வி.ரமணா

"இந்திய சூழலுக்கு ஏற்ப நீதி நடைமுறைகளை மாற்ற வேண்டும்" - தலைமை நீதிபதி என்.வி.ரமணா
"இந்திய சூழலுக்கு ஏற்ப நீதி நடைமுறைகளை மாற்ற வேண்டும்" - தலைமை நீதிபதி என்.வி.ரமணா

இந்திய நீதித்துறை கட்டமைப்பை நாட்டின் தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியுள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்

பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவில் தற்போதுள்ள நீதித்துறை நடைமுறைகள் பிரிட்டிஷ் காலத்தை சார்ந்தவை என்றும் எனவே இந்திய சூழலுக்கு பொருத்தமாக அந்நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். நீதி பரிபாலன நடைமுறைகளை வெளிப்படையானதாகவும் எளிதில் அணுகும் வகையிலானதாகவும் மாற்றி மனுதாரர் நலனை மையமாக கொண்டதாக்க வேண்டும் என்று அவர் பேசினார். நீதி பெறுவதில் சாமானிய மனிதர்கள் பெரும் தடைகளை சந்திப்பதாகவும் அவை அகற்றப்பட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com